பழங்குடியினர் ஒப்பந்த மசோதாவை எதிர்த்து நியூசிலாந்து மெளரி இனத்தவர் ஆர்ப்பாட்டம்

2 mins read
97eebdd1-8654-4a04-a98e-2e3f07611fa5
இந்த அணிவகுப்பு, தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவால் தூண்டப்பட்டாலும், நியூசிலாந்தின் மெளரி இனத்தவர் உடானான உறவு பற்றிய பரந்த உரையாடலை இது தூண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.   - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்தின் இன உறவுகள் தொடர்பான ஓர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நவம்பர் 11ஆம் தேதி நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனை நோக்கி ஒன்பது நாள் அணிவகுப்பைத் தொடங்கினர்.

நாட்டின் வடக்கே உள்ள கேப் ரீங்காவில் ஒரு விடியல் விழாவிற்குப் பிறகு கார்களும் அணிவகுப்புக் குழுவினரும் புறப்பட்டு, நாட்டின் தெற்கு நோக்கி நகரும்போது நகரங்களில் பேரணிகளை நடத்துவார்கள் என்று ‘ஹானர் தி ட்ரீட்டி’  (Honour the Treaty) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எரு கபா கிங்கி தெரிவித்தார்.

இந்த அணிவகுப்பு, தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவால் தூண்டப்பட்டாலும், நியூசிலாந்தின் மெளரி இனத்தவருடனான உறவு பற்றிய பரந்த உரையாடலை இது தூண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள் என்று திரு கிங்கி கூறினார்.

“இது மெளரி மட்டுமல்ல, நியூசிலாந்தில் உள்ள மக்களும், பழங்குடி மக்களுக்கு என்ன நடந்தது என்பதை சரியாகப் புரிந்துகொள்வதற்கான வேட்கையை உருவாக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஒப்பந்தத்தின் மூலம் எழுப்பப்படும் முக்கியமான அரசியல் மற்றும் அரசியலமைப்பு கேள்விகளை நீதிமன்றங்களுக்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய இந்த மசோதா அனுமதிக்கும் என்று இணை நீதி அமைச்சர் டேவிட் சீமோர் கடந்த வாரம் கூறினார்.

கடந்த ஆண்டு தேர்தலில் 8.6% வாக்குகளை வென்ற அவரது ACT நியூசிலாந்து கட்சியினர், பல நடவடிக்கைகளில் அதிகமாகப் பிரதிநிதித்துவம் பெற்ற மவோரியினரை உயர்த்த வடிவமைக்கப்பட்ட கொள்கைகளால் பழங்குடியினர் அல்லாத குடிமக்கள் பின்தங்க வைத்திருப்பதாக வாதிடுகின்றனர்.

இந்த மசோதா கிட்டத்தட்ட தோல்வியடையும் என்றாலும், அதன் அறிமுகம் நியூசிலாந்தில் இனப் பதற்றங்களைத் தூண்டியுள்ளது. நியூசிலாந்தின் 5.3 மில்லியன் மக்களில் 20% மெளரி இனத்தவர் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்