வெலிங்டன்: நேஷனல் கட்சி, எசிடி நியூசிலாந்து, நியூசிலாந்து ஃபர்ஸ்ட் ஆகிய கட்சிகளிடையே ஆட்சி அமைக்க இரவோடு இரவாகக் கொள்கை அடிப்படையிலான உடன்பாட்டை எட்டிவிட்டதாக நியூசிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் லக்சன் திங்கட்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
எசிடி நியூசிலாந்தும் நியூசிலாந்து ஃபர்ஸ்டும் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் நேஷனல் கட்சி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
ஆனால், அது ஆட்சி அமைக்க போதுமானதாக இல்லை. எனவே, எசிடி நியூசிலாந்து, நியூசிலாந்து ஃபர்ஸ்ட் இரு கட்சிகளின் ஆதரவை நேஷனல் கட்சி நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், மூன்று கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.