கார் விபத்துக்குப் பிறகு பதவி விலகும் நியூசிலாந்தின் நீதித்துறை அமைச்சர்

கார் விபத்துக்குப் பிறகு பதவி விலகும் நியூசிலாந்தின் நீதித்துறை அமைச்சர்

1 mins read
ecbcd0f4-7b26-4ab0-bab0-e6c2c8ada7b7
கடந்த மார்ச் மாதத்திலிருந்து நியூசிலாந்து அமைச்சரவையை விட்டு விலகும் நான்காவது அமைச்சர் திருவாட்டி கிரி ஏலன். - படம்: கிரி ஏலன் - தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்/ஃபேஸ்புக்

வெலிங்டன்: நியூசிலாந்தின் நீதித் துறை அமைச்சர் கிரி ஏலன் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகவும், தாம் கைதுசெய்யப்பட்டதைத் தடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து பதவி விலகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பின்னேரத்தில் வெலிங்டனில் நடந்த கார் விபத்தில் சம்பந்தப்பட்ட அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டதாகப் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

திருவாட்டி ஏலனிடம் மேற்கொள்ளப்பட்ட மதுபானச் சோதனையிலிருந்து கிடைத்த முடிவுகள் சட்டபூர்வ அளவைத் தாண்டியிருப்பதாகக் கூறிய அவர், குற்றச்சாட்டுகள் அதன் தொடர்பில் சாட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்தார்.

திருவாட்டி கிரியிடம் தாம் பேசியதாகவும், அவர் அமைச்சர் பதவியில் இருப்பதற்கான நிலையில் இல்லை என்று தாம் நம்புவதாகவும் திரு ஹிப்கின்ஸ் கூறினார். திருவாட்டி ஏலன் அதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகப்போவதாகக் கூறியிருப்பதாகவும் சொன்னார்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து திரு ஹிப்கின்சின் அமைச்சரவையைவிட்டு விலகும் நான்காவது அமைச்சர் திருவாட்டி கிரி ஏலன்.

குறிப்புச் சொற்கள்