நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு; மூன்று பேர் பலி

1 mins read
772913db-2dff-4030-a523-42fc04c35fe6
பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டத்திற்குச் சில மணி நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

சிட்னி: நியூசிலாந்தின் ஆகப்பெரிய நகரான ஆக்லாந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், குறைந்தது மூன்று பேர் மாண்டனர். அவர்களில் ஆயுதம் ஏந்திய துப்பாக்கிக்காரரும் ஒருவர். ஐந்து பேர் காயமடைந்தனர்.

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டத்திற்குச் சில மணி நேரத்திற்கு முன்னர், அந்தச் சம்பவம் நேர்ந்தது.

காற்பந்துப் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறினார். துப்பாக்கிச்சூடு தனி ஒருவரின் செயலாகத் தோன்றுவதாய் குறிப்பிட்ட அவர், சம்பவத்தின் தொடர்பில் காவல்துறை வேறு எவரையும் தேடவில்லை என்றும் தெரிவித்தார்.

நியூசிலாந்தின் பாதுகாப்பு மிரட்டல் இல்லை என்றும் திரு ஹிப்கின்ஸ் கூறினார். ஆனாலும், நகரில் அதிகமான காவல்துறையினர் பணியில் அமர்த்தப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிக்காரர் வேட்டைத் துப்பாக்கியுடன் கட்டடத் தளத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த ஆடவர், சிறிது நேரத்திற்குப் பிறகு மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்