தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக இப்போது அங்கீகரிக்க மாட்டோம்: நியூசிலாந்து

1 mins read
e972e87c-b70a-4472-a172-b12f2b76d5fa
நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ். - படம்: இபிஏ

வெலிங்டன்: பாலஸ்தீனத்தைத் தனிநாடாக இப்போதைக்கு அங்கீகரிக்கப்போவதில்லை என்று நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) தெரிவித்தார்.

இருப்பினும், இருநாட்டுத் தீர்வுக்கு நியூசிலாந்து கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

“போர் நடந்து வருகிறது. காஸாவில் ஹமாஸ் அரசாங்கமாகச் செயல்பட்டு வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பாலஸ்தீனத்தின் எதிர்காலம் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. எனவே, தற்போதைக்கு பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்க முடியாது,” என்று நியூயார்க்கில் உள்ள ஐநா சபையில் திரு பீட்டர்ஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்