தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூசிலாந்து மக்கள்தொகை வளர்ச்சி மெதுவடைந்தது

1 mins read
b975946e-1cd2-42af-9def-f2380ca5df79
கூடுதல் சம்பளத்துடனான வேலையைத் தேடி வெளிநாடுகள் செல்லும் நியூசிலாந்து நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்தின் மக்கள்தொகை வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மெதுவடைந்துள்ளது.

பொருளியல் மந்தநிலை காரணமாக நியூலாந்துக்கு இடம்பெயரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாது, நியூசிலாந்திலிருந்து வெளியேறும் அந்நாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம் 31ஆம் தேதி வரை நியூசிலாந்தின் மக்கள்தொகை வளர்ச்சி தோராயமாக 37,400ஆகப் பதிவானது.

இதன்மூலம் அதன் மக்கள்தொகை ஏறத்தாழ 5.33 மில்லியனை எட்டியது. இத்தகவலை நியூசிலாந்தின் புள்ளிவிவரத்துறை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்டது.

2022ஆம் ஆண்டில் மூன்றாம் காலாண்டுக்குப் பிறகு இதுவே ஆகக் குறைவான மக்கள்தொகை அதிகரிப்பு.

மரணம் அடைந்தோர் எண்ணிக்கையைவிட பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 21,000 அதிகம்.

உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வளர்ச்சிக்கு ஆதரவு வழங்க மக்கள்தொகை வளர்ச்சியை நியூசிலாந்துப் பொருளியல் காலங்காலமாகச் சார்ந்துள்ளது.

பல்வேறு துறைகளில் உள்ள திறன் பற்றாக்குறையை நிரப்ப நியூசிலாந்துககு வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

இந்நிலையில், கூடுதல் சம்பளத்துடனான வேலையைத் தேடி வெளிநாடுகள் செல்லும் நியூசிலாந்து நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்