அமெரிக்காவின் பல பகுதிகளில் பெய்த கடும் பனிப்பொழிவும் வீசிய உறைபனிக் காற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் அதில் உயிரிழந்தனர்.
உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியில் சில பகுதிகள் பனிப்புயலில் உறைந்திருந்தன.
கனடாவின் ஒன்டாரியா மாநிலத்துக்கும் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.
அது உலகின் மிகப் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போனதைக் காட்டும் சமூகக் காணொளிப் பதிவு கீழே (காணொளி: அண்டலூ இமேஜஸ்)

