வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்குத் தீவிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வயிட் தீவு எரிமலை ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று வெடித்தது.
இதையடுத்து, எரிமலையிலிருந்து பேரளவிலான சாம்பல் வெளியேறியது.
இதன் காரணமாக நியூசிலாந்தில் சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
எரிமலை வெடிப்பும் அதிலிருந்து சாம்பல் வெளியேறுவதும் அடுத்த சில வாரங்களிலிருந்து மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதே வயிட் தீவு எரிமலை 2019ஆம் ஆண்டில் வெடித்தபோது 22 பேர் மாண்டனர்.
ஒரு காலத்தில் அங்குப் பல சுற்றுப்பயணிகள் சென்றனர்.
எரிமலை வெடித்ததை அடுத்து, ஏர் நியூசிலாந்தின் பத்து விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
விமானப் பயணப் பாதையை எரிமலைச் சாம்பல் மூடியதால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சாம்பல் கலைந்ததும் விமானச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாக ஏர் நியூசிலாந்து கூறியது.