ஹனோய்: வியட்னாமின் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவரான டுருவோங் மை லான் (Truong My Lan) பெரிய அளவில் நிதி மோசடி செய்ததால் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து திருவாட்டி லான் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த வியட்னாமிய நீதிமன்றம் மரண தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை என்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) தீர்ப்பளித்தது.
68 வயது லான் எஸ்சிபி (SCB) வங்கி மூலம் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. லான் கிட்டத்தட்ட 36 பில்லியன் வெள்ளி மோசடி செய்துள்ளார்.
தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை கடுமையான தண்டனை என்றும் அதை நீதிமன்றம் மனிதாபிமான முறையில் குறைக்க வேண்டும் என்று லான் மேல்முறையீட்டின்போது கோரினார்.
லான் செய்தது பெரிய குற்றம். அதனால் தண்டனையை குறைக்கமுடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
லானின் கணவரும் மேல்முறையீட்டின் போது இருந்தார். வங்கி விதிமுறைகளை மீறியதற்காக லான் கணவருக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரும் தமது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.