இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, ஹமாஸ் வசம் உள்ள 24 பிணையாளிகளில் மூவரில் நிலை குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
21 பிணையாளிகள் நிச்சயமாக உயிருடன் இருக்கிறார்கள் என்ற திரு நெட்டன்யாஹு, மூவரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒரு வாரத்துக்கு முன் 24 பிணையாளிகள் உயிருடன் இருக்கின்றனர் என்று கூறினார். ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 21க்குக் குறைக்கப்பட்டுள்ளது.
‘த ஹாஸ்டேஜஸ் அண்ட் மிஸிங் ஃபேமிலிஸ்’ (The Hostages and Missing Families) அமைப்பு பிணையாளிகள் குறித்து தகவல்கள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. காஸாவில் விரிவுபடுத்தவிருக்கும் இஸ்ரேலின் தாக்குதலையும் திரு நெட்டன்யாஹு உடனடியாக நிறுத்தும்படியும் அது கேட்டுக்கொண்டது.
இறுதி பிணையாளி விடுவிக்கப்படும்வரை போரை நிறுத்தும்படி அமைப்பின் பேச்சாளர் திரு நெட்டன்யாஹுவிடம் கூறினார். அதுதான் நாட்டின் ஆக முக்கியமான, அவசரமான பணி என்றார் அவர்.
பிணையாளிகளை மீட்பதுதான் போரின் மிக முக்கிய குறிக்கோள் என்று கடந்த வாரம் சொன்ன திரு நெட்டன்யாஹு, அதைவிட முக்கியமான இலக்கு எதிரிகள்மீது வெற்றிக்கொள்வது என்றார்.
தெற்கு இஸ்ரேலில் 2023 அக்டோபர் மாதம் ஹமாஸ் தரப்பு நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதோடு 251 பேர் பிணைப் பிடிக்கப்பட்டனர்.
இதுவரை இஸ்ரேல் 196 பிணையாளிகளை மீட்டுள்ளது. அவர்களில் 147 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
போரால் ஏறக்குறைய 52,653 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

