கடப்பிதழ் படத்தில் செயற்கை கண் இமைகள் இருக்கக்கூடாது; ஒவ்வொரு முடியாக அகற்றிய பெண்

கடப்பிதழ் படத்தில் செயற்கை கண் இமைகள் இருக்கக்கூடாது; ஒவ்வொரு முடியாக அகற்றிய பெண்

1 mins read
ae89fb24-771a-452e-8e63-5e0d471eb1ac
படம்: ஃபேஸ்புக்/சக்கிரா மாமி -
Google News Preferred Icon

மலேசியாவில் கடப்பிதழுக்கான படத்தில் செயற்கை கண் இமைகள் இருக்கக்கூடாது என்பதற்காக தமது கண் இமையில் புதிதாக ஒட்டிய கண்ணிமை முடிகளை ஒவ்வொன்றாக தாமாகவே அகற்றினார் ஒரு பெண்.

சம்பவம் குறித்து சக்கிரா மாமி என்ற அந்தப் பெண், ஃபேஸ்புக் வழி தமது அனுபவத்தைப் பதிவிட்டுள்ளார்.

ஜோகூரில் தமது கடப்பிதழைப் புதுப்பிக்கச் சென்றபோது ஒப்பனை இல்லாத முகப்படம்தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

கடப்பிதழ் அலுவலகத்தில் ஏற்கெனவே 2 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததால் வேறு வழியின்றித் தமது செயற்கைக் கண் இமைகளைத் தாமாகவே அகற்றத் தொடங்கியதாக அவர் பதிவிட்டார்.

கழிவறையில் அதனைச் செய்ததாகவும் செயற்கையான இமைகளை அகற்றியபோது தமது உண்மையான கண் இமையில் இருந்த சில சொந்த முடிகளும் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தமது அனுபவம் மற்றவர்களுக்கு உதவும் என்பதற்காக இதைப் பதிவு செய்வதாக அவர் கூறினார்.

இறுதியாக தமது கடப்பிதழ் புதுப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் ‌‌சக்கிரா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்