தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்

தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்

10 Jun 2023 - 7:51 pm

1 mins read

தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன.

சனிக்கிழமை(ஜூன் 10) காலை இச்சம்பவம் நடந்தது.

இரண்டு விமானங்களும் ஓடுபாதைக்குச் செல்லும் பாதையில் சென்றபோது மோதிக்கொண்டதாகக் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை, இருப்பினும் விமான நிலையத்தில் இருந்த 4 ஓடுபாதைகளில் ஒரு ஓடுபாதை உள்ளூர் நேரப்படி 11 மணியளவில் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனால் சில விமானங்களின் பயணங்கள் தாமதமானதாகக் கூறப்படுகிறது.

பாதையில் மோதிக்கொண்டவை தைவானின் எவா ஏர்வேஸும் தாய் ஏர்வேஸும். அதுதொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.

தாய் ஏர்வேஸ் விமானத்தின் இறகு ஒன்று சேதமடைந்ததால் அதனால் பயணம் செய்யமுடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

அந்த விமானத்தில் 250 பயணிகளும் 14 சிப்பந்திகளும் இருந்தனர்.

சம்பவம் குறித்து ஜப்பானிய சிவில் போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.

குறிப்புச் சொற்கள்