இந்தோனீசியக் காட்டுத்தீயில் மலேசிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாகத் தகவல் இல்லை

இந்தோனீசியக் காட்டுத்தீயில் மலேசிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாகத் தகவல் இல்லை

படம்: ஏஎஃப்பி

14 Oct 2026 - 10:25 am

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய நிறுவனங்களும் இந்தோனீசியாவில் எரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அந்நாட்டில் புகையும் காட்டுத்தீயில் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தங்களின் வெளியுறவு அமைச்சு, தோட்ட, பண்டங்கள் அமைச்சு ஆகியவற்றுடன் சரிபார்த்துவிட்டதாக அந்நாட்டின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்தன்மை துணை அமைச்சர் சையது இப்ராகிம் சையது நோ தெரிவித்துள்ளார்.

“இதில் மலேசிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அங்கு (இந்தோனீசியாவில்) செயல்பாடுகள் இருப்பவற்றை அழைத்து விரைவில் தீர்வுகாண முயற்சி செய்யலாம்,” என்று அவர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நடந்த நாடாளுமன்றக் கீழவையின் சிறப்பு அமர்வின்போது கூறினார்.

குறிப்புச் சொற்கள்