தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோபல் பரிசு பெற்ற மலாலாவின் திருமணம்

1 mins read
80e50f68-c656-49ce-9ec8-f418f7a4f5bb
படம்: மலாலா டுவிட்டர் -
multi-img1 of 2

பெண் குழந்தைகள் கல்விக்கு போராடியதற்காக, மலாலா யூசப்சை மீது தலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர்.

தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் உலக கவனத்தை ஈர்த்தது.

தலையில் பலத்த காயமடைந்து இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மலாலா, தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார்.

தனது 16வது வயதில் கல்வியில் பாலின சமத்துவத்தின் அவசியம் குறித்து ஐநா சபையில் உரையாற்றிய மலாலா, தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பணியாற்றி வருகிறார்.

இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அசர் என்பவருடன் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் எளிமை முறையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நவம்பர் 9ஆம் தேதி மலாலா யூசப்சை தம் டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு அதிக வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.

அண்மையில் மலாலா இங்கிலாந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில்,

"மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை இப்போது வரைக்கும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் வாழ்கைக்கு ஒரு துணைவர் வேண்டுமென்றால், பிறகு ஏன் திருமண பத்திரங்களில் கையெழுத்து போடுகிறீர்கள். அது வெறும் பாட்னர்ஷிப்பாக மட்டும் ஏன் இருக்க கூடாது" என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவரது இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.