வடகொரியா 10 ஏவுகணைகளைப் பாய்ச்சியது: தென்கொரியா

வடகொரியா 10 ஏவுகணைகளைப் பாய்ச்சியது: தென்கொரியா

2 mins read
497cf291-fca0-48f3-8335-1f94164c8f50
பாய்ச்சப்பட்ட ஏவுகணை கடலில் விழுந்திருக்கக்கூடும் என்று ஜப்பானிய கடலோரக் காவற்படை தெரிவித்தது. - படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியா, ஜப்பானிய கடலை நோக்கி 10 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியிருப்பதாகத் தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிகள் குறித்துப் பியோங்யாங் எச்சரித்த ஒருசில நாள்களில் சோலின் கூட்டுப் படைத் தளபதி அவ்வாறு கூறினார்.

அண்மையில் தென்கொரியாவுடன் அரசந்திர உறவைச் சீர்செய்வதற்கான முயற்சியை வடகொரியா கீழறுத்தது. தென்கொரியாவின் அமைதி முயற்சிகள் ஏமாற்று வேலை என்று அந்நாடு வருணித்தது.

சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 12.15 மணியளவில் கிழக்குக் கடலை நோக்கி வடகொரியாவின் சுனான் வட்டாரத்திலிருந்து அடையாளம் தெரியாத 10 புவியீர்ப்பு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக அறிக்கையொன்றில் கூட்டுப் படைத் தளபதி கூறியிருந்தார்.

ஜப்பானின் தற்காப்பு அமைச்சும் அதனை உறுதிப்படுத்தியது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சு நடத்துவது நல்லது என்று கருதுவதாகத் தென்கொரிய பிரதமர் கிம் மின்-சியோக் தெரிவித்த ஒருசில மணிநேரத்தில் அண்மை அறிவிப்பு வந்துள்ளது.

வடகொரியாவின் அணுத் திட்டத்தைத் துடைத்தொழிக்கப் பல்லாண்டாக முயன்று வருகிறது அமெரிக்கா. தடைகள், அரசதந்திர நெருக்கடிகள் என எவையும் பியோங்யாங்கிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

டிரம்ப் நிர்வாகம், அண்மை மாதங்களில் பியோங்யாங்குடன் உயர்நிலைப் பேச்சு நடத்தத் திட்டமிட்டு வருகிறது. இவ்வாண்டு (2026) திரு கிம்முடன் உச்சநிலை மாநாட்டை ஏற்பாடு செய்வது குறித்தும் அது யோசித்து வருகிறது. அமெரிக்க அதிபர் அடுத்த மாதத் தொடக்கத்தில் பெய்ஜிங் செல்ல எண்ணியுள்ளார். அப்போது வடகொரியத் தலைவரை அவர் சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்