சோல்: கடந்த 2019ஆம் ஆண்டில் 58 பில்லியன் வோன் (55.7 மில்லியன் வெள்ளி) மதிப்புகொண்டிருந்த ‘எத்திரியம்’ (Ethereum) மின்னிலக்க நாணயக் கொள்ளையில் வடகொரிய ராணுவத்துடன் தொடர்புடைய ஊடுருவிகளுக்குச் சம்பந்தம் உள்ளதாக விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தென்கொரிய காவல்துறையினர் வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) தெரிவித்தனர்.
அந்த ஊடுருவிகள், தாங்களே உருவாக்கிய மூன்று மின்னிலக்க நாணயச் சந்தைகளில், கொள்ளையடித்த பாதிக்கும் மேலான சொத்துகளை நல்லவையாக மாற்றினர் என்று தென்கொரியாவின் தேசிய காவல்துறை அமைப்பு கூறியது. ‘பிட்கோய்ன்’ மின்னிலக்க நாணயத்தைவிடக் குறைவான விலையில் அவை விற்கப்பட்டன.
கொள்ளையடிக்கப்பட்ட எஞ்சிய சொத்துகள் 51 சந்தைகளில் நல்லவையாக மாற்றப்பட்டன என்று காவல்துறை குறிப்பிட்டது.
சம்பந்தப்பட்ட ஊடுருவிகள், எத்திரியம் விற்கப்பட்ட தளத்தை ஊடுருவி 342,000 ‘வட்டுகளை’ (tokens) கொள்ளையடித்ததாக காவல்துறை, அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அவற்றின் மதிப்பு தற்போதைய நிலவரப்படி 1.4 டிரில்லியன் வோனுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் காவல்துறை சொன்னது.
ஊடுருவிகன் உருவாக்கிய மின்னிலக்க நாணயச் சந்தையின் பெயரை காவல்துறை தெரிவிக்கவில்லை. எனினும், 58 பில்லியன் வோன் மதிப்பிலான எத்திரியம் அடையாளம் தெரியாத மின்பணப்பை ஒன்றுக்கு அனுப்பப்பட்டதைத் தாங்கள் அறிந்ததாக தென்கொரியாவில் இயங்கும் ‘அப்பிட்’ (Upbit) சந்தை தெரிவித்தது.
தென்கொரியாவின் தேசிய காவல்துறை அமைப்பின் அதிகாரி ஒருவர், ஊடுருவிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த மறுத்தார். எனினும், வடகொரிய ராணுவத்துடன் தொடர்புடைய அமைப்பு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட ‘லேஸரஸ், அண்டேரியல்’ (Lazarus, Andariel) ஆகிய குழுக்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டதாகக் காவல்துறையை மேற்கோள்காட்டி தென்கொரிய ஊடகங்கள் குறிப்பிட்டன.