ஜப்பானின் அணு ஆயுதத் திட்டத்தை எதிர்க்கும் வடகொரியா

1 mins read
63ef1d0d-d50f-4285-ab60-12a32c9c3494
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி வடகொரியா 2006ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: ஜப்பானின் அணு ஆயுதத் திட்டத்தை எதிர்த்து வடகொரியா குரல் கொடுத்துள்ளது.

சில நாள்களுக்கு முன்னர் ஜப்பானியப் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத உயர் அதிகாரி ஒருவர், “தோக்கியோ அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும்,” என்று கூறியதாக ‘கியோடா’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இதையடுத்து வடகொரியா ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 21) கருத்து தெரிவித்துள்ளது.

“எப்பாடுபட்டாவது ஜப்பானின் அணு ஆயுதக் கனவை நிறுத்த வேண்டும். அணு ஆயுதத்தின்மீது ஜப்பானின் ஆசையை வெளிப்படுத்துகிறது. இது ஆபத்தானது,” என்று வடகொரியா கூறுகிறது.

“ஜப்பான் அணு ஆயுதத்தை வைத்திருந்தால் மனிதகுலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும், ஆசிய நாடுகளுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக அமையும்” என்றும் அது குறிப்பிட்டது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி வடகொரியா 2006ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அது 10க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்