வடகொரியாவில் சரியும் பிறப்பு விகித்தை மீட்டெடுக்க கிம் ஜோங் உன் அறைகூவல்

1 mins read
97b15e1b-fd9a-4f8f-83be-4c7613212487
வடகொரியாவில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற தாய்மார்களின் 5வது தேசிய கூட்டத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பங்கேற்று உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்

பியோங்யாங்: வடகொரியாவில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு விகிதத்தை மீட்டெடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்படி நாட்டு மக்களுக்கு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அறைகூவல் விடுத்துள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது.

இதை அந்நாட்டு மக்கள் அனைவரின் வேலை என்று அவர் விவரித்ததாக அது மேலும் குறிப்பிட்டது.

ஞாயிற்றுக்கிழமை தலைநகர் பியோங்யாங்கில் நடந்த தாய்மார்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் திரு கிம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்ததாக அது கூறியது.

“பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பது, குழந்தைகளை நல்ல முறையில் பராமரிப்பது ஆகியவை நாம் தாய்மார்களுடன் இணைந்து வீட்டில் செய்ய வேண்டிய பராமரிப்புக் கடமைகள்,” என அந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்