ஐநா பொதுக் கூட்டத்தில் வடகொரிய அமைச்சர் கலந்துகொள்வார்

ஐநா பொதுக் கூட்டத்தில் வடகொரிய அமைச்சர் கலந்துகொள்வார்

படம்: ராய்ட்டர்ஸ்

18 Sep 2026 - 1:59 pm

1 mins read

சோல்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் (ஐநா) பொதுச் சபையின் மாநாட்டில் கலந்துகொள்ள வடகொரியாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் கிம் சொன் கியோங் வருகை தரவுள்ளதாகத் தென்கொரியாவின் யொன்ஹப் ஊடகம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரசையும் கியூபா, வெனிசுவேலா போன்ற பல நட்பு நாடுகளின் அதிகாரிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவரங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரநிதிகள் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) முதல் சனிக்கிழமை (செப்டம்பர் 26) வரையிலும், பிறகு செப்டம்பர் 28ஆம் தேதியும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூடுகிறது. அந்த கூட்டத்தில் மேடை ஏறி, உரையாற்ற வடகொரய வெளியுறவுத் துணை அமைச்சர் திட்டமிடுவதாகவும் அந்த செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அவர் ஏற்கெனவே 2025ஆம் ஆண்டு ஐநா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.

“அணுவாயுதக் கொள்கையைக் கைவிடுவது நாட்டின் இறையாண்மையையும் வாழ்வாதாரத்தையும் சரணடையச் செய்வதற்கு இணையாகும்,” என்று அமைச்சர் கிம் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
மாநாடுவெளியுறவு அமைச்சுவெளியுறவு அமைச்சர்அமைச்சர்பேரணி உரை