சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு இரண்டு உள்ளூர் ‘பங்சான்’ இன நாய்களை வழங்கியிருக்கிறார்.
அரசாங்க ஊடகமான ‘கேசிஎன்ஏ’ அதனைத் தெரிவித்தது.
அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள கொரிய சென்ட்ரல் தொலைக்காட்சியில், ஜூன் 20ஆம் தேதி ஒளிபரப்பான செய்தியில், அவர்கள் அந்த நாய்களைப் பார்வையிடுவதைக் காணமுடிந்தது.
திரு கிம் குதிரை ஒன்றுக்கு கேரட் ஊட்டிக்கொண்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘லிமொசின்’ கார் ஒன்றில் பயணம் செய்தனர்.
‘பங்சான்’ இன வேட்டை நாய்கள், வடகொரியாவின் வடபகுதியில் உள்ள வட்டாரத்திலிருந்து வருபவை.
2018ஆம் ஆண்டில், தென்கொரியாவின் முன்னாள் அதிபர் மூன் ஜே இன், திரு கிம்மிடமிருந்து இரண்டு ‘பங்சான்’ நாய்களைப் பெற்றுக்கொண்டார்.