தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடகொரியா ராணுவம் வலுப்படுத்தப்படும்: அதிபர் கிம்

1 mins read
66b3bf5e-2617-4e3f-b684-39311b4f8a74
தென்கொரியாவில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு ஈடாக கேள்விக்கே இடமில்லாமல் எதிர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடகொரிய அதிபர் அறிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: வடகொரியா அதன் ராணுவத்தை கேள்விக்கே இடமில்லாமல் வலுப்படுத்தும் என்று அதிபர் கிம் ஜோங் உன் கூறியதாக கேசிஎன்ஏ (KCNA) என்ற அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகம் அக்டோபர் 5 (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

“தென் கொரியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் அமெரிக்க ராணுவம் உத்திப்பூர்வ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதால், அதற்கு சரிசமமாக வடகொரிய ராணுவம் சிறப்பு ஏற்பாடுகளை அதன் முக்கிய இலக்குகளில் வலுப்படுத்தியுள்ளது” என்று அதிபர் கிம் தெரிவித்துள்ளார். கொரிய பட்டாளிக் கட்சியின் 80வது நிறைவுநாளையொட்டி நடந்த ராணுவ கண்காட்சியில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

வடகொரியாவின் எதிரிகள், அவர்களது பாதுகாப்பு வட்டம் சுழல்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் எச்சரித்தார். அமெரிக்க ராணுவக் குவிப்பை எதிர்கொள்ள வடகொரியா கேள்விக்கிடமின்றி அதன் ராணுவத்தை வலுப்படுத்தும் என்று கூறியதோடு, மேல் விவரங்களை அதிபர் கிம் தவிர்த்தார்.

உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு உதவிட வடகொரிய ராணுவத்தை அனுப்பினார் அதிபர் கிம். இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாட அண்மையில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பைக் காண திரு கிம் சீனாவுக்குச் சென்றார் .

அதன்படி, ரஷ்யாவுடனும் சீனாவுடனும் தமது உறவுகளை வடகொரிய அதிபர் நெருக்கமாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்