சோல்: தென்கொரியாவுக்கு வடகொரியா மேலும் ஓர் இடைஞ்சலை அளித்து உள்ளது.
கொரிய தீபகற்பத்தின் கிழக்கு, மேற்குத் திசைகளின் இடையே உள்ள கொரிய ரயில் போக்குவரத்தின் குறுக்கே தடுப்புகளை வடகொரியா அமைத்து உள்ளது.
தனது எல்லை தனக்கே சொந்தம் என்ற அடிப்படையில் அது நடந்துகொண்டு உள்ளதாக தென்கொரியாவின் ஐக்கிய அமைச்சு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) தெரிவித்தது.
இது தொடர்பாக அமைச்சின் பேச்சாளரான கிம் இன்-ஏவே செய்தியாளர்களிடம் விளக்கினார்.
“டோங்கே ரயில் பாதையின் தாழ்வான பகுதிகளில் வடகொரியா ஏற்கெனவே தடுப்புகளை அமைத்துவிட்டது,” என்றார் அவர்.
இதுபோன்ற தடுப்புச் சுவர்கள் கியோகெயி ரயில் பாதை அருகிலும் காணப்பட்டதாகவும் அதனை அகற்றும் பணி நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவ எல்லைக் கோட்டின் அருகே இரு கொரியாக்களையும் இணைக்கும் அந்த இரு ரயில் பாதைகளும் சாலைகளும் இம்மாதத் தொடக்கத்தில் வடகொரியாவால் தகர்க்கப்பட்டன.
வடகொரியா கொடுத்து வரும் இடைஞ்சல்களை தென்கொரியா கவனித்து வரும் அதேவேளை ரஷ்யாவுடன் அது எவ்வாறு இணக்கமாக உள்ளது என்பதையும் உற்றுநோக்கி வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.