தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டிஷ் மன்னருக்கு எதிராகக் குரலெழுப்பிய ஆஸ்திரேலிய செனட்டர்

1 mins read
2b167376-7f60-4248-a70d-db291d562382
ஆஸ்திரேலியப் பழங்குடியினரான சுயேச்சை செனட்டர் லிடியா தோர்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

கேன்பரா: பிரிட்டிஷ் மன்னர் ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவர் சிறப்புரை ஆற்றியதை அடுத்து, அவருக்கு எதிராக சுயேச்சை செனட்டர் ஒருவர் குரல் எழுப்பினார்.

“நீங்கள் எனது மன்னர் அல்ல,” என்று ஆஸ்திரேலிய பழங்குடியினரான லிடியா தோர்ப் உரக்க கத்தினார்.

கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு அவர் கத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியப் பழங்குடியினரைப் பிரிட்டிஷ் அரச குடும்பம் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சுமத்திய திருவாட்டி தோர்ப், ஆஸ்திரேலியா மன்னர் சார்ல்சின் நிலம் இல்லை என்று கூறினார்.

திருவாட்டி தோர்ப்பைப் பாதுகாவல் அதிகாரிகள் ஒருவழியாக அங்கிருந்து கொண்டு சென்றனர்.

அதன் பிறகு, மன்னர் சார்ல்சும் அரசியார் கமிலாவும் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோரைச் சந்தித்தனர்.

குறிப்புச் சொற்கள்