ஒப்பந்தத்திற்கு இசைய மறுத்தால் ஈரானில் எதுவும் மிஞ்சாது: டிரம்ப் எச்சரிக்கை

ஒப்பந்தத்திற்கு இசைய மறுத்தால் ஈரானில் எதுவும் மிஞ்சாது: டிரம்ப் எச்சரிக்கை

1 mins read
330fdbe6-2a73-49b8-b43d-8de8d55129b6
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை (மே 17) ஈரானுக்குப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமைதி ஒப்பந்தத்திற்கு டெஹ்ரான் விரைவில் உடன்படவில்லை என்றால், ஈரானில் எதுவும் மிச்சம் இருக்காது என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது போர் தொடுத்தன. அதன் பிறகு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது அமெரிக்கா.

ஈரானியப் போர், மத்திய கிழக்கை உலுக்கியுள்ளது. எரிசக்தி விலைகள் தொடர்ந்து ஏற்றங்கண்டு வருகின்றன.

“ஈரானுக்குக் காலம் கடந்துகொண்டிருக்கிறது. அது விரைந்து செயல்படுவது நல்லது. இல்லையென்றால், அதற்கு எதுவும் மிஞ்சாது,” என்று திரு டிரம்ப், ட்ரூத் சோ‌ஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

“நேரம் பொன்னானது!,” என்றார் அவர்.

ஈரானியப் போரால் ஹோர்முஸ் நீரிணை முடங்கிப்போயுள்ளது. அது வழியாகத்தான் உலகின் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டு எண்ணெய்ப் போக்குவரத்து நடைபெறுகிறது.

சென்ற மாதம் (ஏப்ரல்) 8ஆம் தேதி, வா‌ஷிங்டனும் டெஹ்ரானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. ஆயினும், அமைதிப் பேச்சு தேக்கமடைந்துள்ளது. அவ்வப்போது தாக்குதல்களும் தொடர்ந்து நடக்கின்றன.

குறிப்புச் சொற்கள்