தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் அதிகரிக்கும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இருமடங்கு அதிகரிப்பு

1 mins read
c4486cd0-b9f3-47fa-8d61-088c62236684
கொவிட்-19 தொற்றுநோய் அறிகுறி உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால் முககவசம் அணிய வேண்டும் என மலேசியாவின் சுகாதாரத் துறை கூறியுள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புத்ராஜெயா: மலேசியாவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 6,796 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் 26ஆம் தேதிக்கும் டிசம்பர் 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட இருமடங்காக அது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முந்தைய வாரத்தில் அது 3,626ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோர் உட்பட சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் விகிதம் 100,000 பேருக்கு மூவராக இருப்பதாவும் 100,000 பேரில் ஒருவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் அந்நாட்டுச் சுகாதார அமைச்சு, டிசம்பர் 1ஆம் தேதி குறிப்பிட்டதாக பெர்னாமா கூறியது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை 0.8 விழுக்காடாக இருந்தது எனக் கூறப்பட்டது.

அதேநேரம் ஆபத்தான நிலையில் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இதர நோயாளிகளின் எண்ணிக்கை 1.1 விழுக்காடு எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை மலேசியாவில் புதிய கொவிட்-19 கிருமி திரிபு எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் உள்நாட்டில் பரவும் திரிபுகள் அதிகம் தொற்ற கூடியவை அல்லது தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதற்கானஅறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் சுகாதார அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்