சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) படிக்கும் இரண்டு மாணவர்கள் தாங்கள் மலேசியாவில் கடத்தப்பட்டதாக நாடகமாடியுள்ளனர்.
அந்த இரு மாணவர்களும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
தாங்கள் கடத்தப்பட்டதாக நாடகமாடிய மாணவர்களில் ஒருவர் தம் தாயிடமிருந்து கிட்டத்தட்ட 900,000 வெள்ளி (2.9 மில்லியன் ரிங்கிட்) பறிக்க இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
மே 2ஆம் தேதி ஜாலான் டார் பகுதியில் உள்ள ஹோட்டலிலிருந்து ஜாங் ரன்போ, 23, மற்றும் யீ யிங்சி, 18 ஆகியோர் தாங்கள் கடத்தப்பட்டதாக யீயின் தாய்க்குத் தகவல் கொடுத்தனர்.
யீயின் தாய்க்கு அவர்கள் இருவரும் ஒரு காணொளியும் அனுப்பியுள்ளனர். அதில் யீயை அச்சுறுத்துவதுபோல் காண்பிக்கப்பட்டது. பின்னர் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்கள் பணத்தை வாங்கக் கடத்தல் நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்தது.
மலேசியாவில் இந்தக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
தற்போது அந்த இரு மாணவர்களும் தலா 30,000 ரிங்கிட் செலுத்தி பிணையில் உள்ளனர். அவர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை இம்மாதம் 27ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

