சீனாவிற்கு ஹாப்பர் சில்லுகள் அனுப்புவதை நிறுத்திய என்விடியா

சீனாவிற்கு ஹாப்பர் சில்லுகள் அனுப்புவதை நிறுத்திய என்விடியா

கோப்புப்படம்: ஏஎஃப்பி

18 Nov 2026 - 10:33 am

2 mins read

சான் ஃபிரான்சிஸ்கோ: சீனாவிற்கு ஹாப்பர் தரவு மையச் சில்லுகள் அனுப்புவதை என்விடியா நிறுவனம் நிறுத்தியுள்ளது.

2025ஆம் ஆண்டில் அந்த வகை சில்லுகளைச் சீனாவிற்கு விற்க அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்திருந்தபோதும் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் உரிமம்பெற்ற ஹாப்பர் தரவு மையப் பொருள்களை S$3.09 பில்லியன் (US$2.4 பில்லியன்) மதிப்பிற்குச் சீனாவிற்கு விற்றதாக என்விடியாவின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரி கோலெட் கிரெஸ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) ஆய்வாளர்களுடனான கூட்டத்தில் தெரிவித்தார்.

ஏற்றுமதி நிறுத்தத்திற்கான காரணத்தை அவர் விளக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் அப்பொருள்களைச் சீனாவிற்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என உறுதியாகக் கூறினார்.

சீன வாடிக்கையாளர்களுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்யப் பல ஆண்டுகளாக அந்நிறுவனம் போராடிய நிலையில், அதனுடைய தற்போதையை நிலைப்பாடு மிகவும் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து ஜென்சன் ஹுவாங் நீக்கப்பட்டார்.

சீன ஏற்றுமதியைத் தீவிரமாக ஆதரித்த அவர், சீன உளவுத்துறைக்கு உதவியதாகவும் சில்லுகளைக் கடத்த துணையாக இருந்ததாகவும் அமெரிக்க அரசால் சந்தேகிக்கப்படும் சீனப் பெண் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்குடன் உறவாடியதாகக் கூறப்படுகிறது.

ஜென்சன் ஹுவாங்கை உளவு பார்க்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைச் சீனா மறுத்துள்ளது.

சீன நிறுவனங்களுக்குத் தொலைதூர அணுகல் வழங்கத் திட்டமிடும் வெளிநாட்டுத் தரவு நிலையங்களுக்கான சில்லு விற்பனையைக் கட்டுப்படுத்த நவம்பர் 16ஆம் தேதி அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

தேசியப் பாதுகாப்பு குறித்த அச்சம், சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி கவனமாகச் செயல்பட வேண்டும் எனவும் கடந்த வாரம் என்டிவியா நிறுவனத்தின் இயக்குநரவைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஹார்வி ஜோன்ஸ் கூறினார்.

தேசியப் பாதுகாப்பு, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கென வாரியக் குழு அமைக்கப்படும் என நவம்பர் 17ஆம் தேதி என்விடியா அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்