கணினி யுகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்விடியாவின் புதிய சில்லு

கணினி யுகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்விடியாவின் புதிய சில்லு

2 mins read
c26c7ea0-c786-4a11-b991-47c93ac19128
என்விடியா தலைமை நிர்வாக அதிகாரியான ஜேன்சன் ஹுவாங் தைப்பேயில் நடைபெற்ற கண்காட்சியில் மே 1ஆம் தேதி உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: கணினி யுகத்தில் மற்றொரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் என்விடியா நிறுவனம், விண்டோஸ் மடிக்கணினிகளுக்கான புதிய சில்லை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட அடுத்த தலைமுறை கணினிகளுக்கான சந்தையில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக என்விடியாவின் சக்திவாய்ந்த சில்லு ஜூன் 1ஆம் தேதி அறிமுகமானது.

உலகின் முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த அறிமுகம், கணினித் துறையில் ஆப்பிள், இன்டெல், ஏஎம்டி போன்ற நிறுவனங்களுக்குச் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தப் புதிய சில்லுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியால் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக வளர்ந்து வரும் என்விடியா, அதன் தரவு மையச் சில்லுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால் மிகுந்த லாபத்தை ஈட்டி வருகிறது.

அது மட்டுமல்லாமல் கணினிச் சந்தையில் தனது நிலையை பன்முகப்படுத்தும் முயற்சியாக புதிய சில்லு உற்பத்தியை அது தொடங்கியுள்ளது.

“மைக்ரோசாஃப்ட்டும் என்விடியாவும் மறுபடியும் கணினி யுகத்தில் புரட்சியை ஏற்படுத்தவிருக்கின்றன. இதுதான், புதிய வகை கணினியாக இருக்கப் போகிறது,” என்று அமெரிக்க என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜான்சன் ஹுவாங் கூறினார்.

தைப்பேயில் முக்கியத் தொழில்நுட்பக் கண்காட்சியான கம்ப்யூடெக்ஸ் தொடங்குவதற்கு முன்பு ஆர்டிஎக்ஸ் ஸ்பார்க் என்ற சில்லை அவர் அறிமுகம் செய்தார்.

“ஒருவர் மின்னிக்க உயிரியலைச் செய்ய விரும்பினாலும் சரி, நில அதிர்வுச் செயல்களை செய்ய விரும்பினாலும் சரி, வானியற்பியலைச் செய்ய விரும்பினாலும் சரி, எல்லாவற்றையும் செய்ய முடியும்,” என்றார் திரு ஹுவாங்.

குறிப்புச் சொற்கள்
கணினிபுரட்சிமைக்ரோசாஃப்ட்என்விடியா