இல்ஹான் ஓமாருக்கு ஒபாமா ஆதரவு

இல்ஹான் ஓமாருக்கு ஒபாமா ஆதரவு

படம்: நியூயார்க் டைம்ஸ்

19 Oct 2026 - 5:40 pm

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜனநாயகக் கட்சி உறுப்பினர் இல்ஹான் ஓமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) சமூக ஊடகத்தில் அவர் இதனைப் பதிவிட்டார்.

“டிரம்ப் நிர்வாகம் ஓமார் மீது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இது அவரை அச்சுறுத்தும் வெளிப்படையான முயற்சி,” என்று ஒபாமா விமர்சித்துள்ளார்.

“அரசியல் நம்பிக்கைகள் அல்லது பேச்சுகளுக்காகத் தனிநபர்களை அரசு குறிவைக்கக் கூடாது. ஆனால் டிரம்ப் நிர்வாகம் அதைத்தான் செய்கிறது,” என்று ஒபாமா கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் ஓமாரின் வாஷிங்டன் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். குடியேற்ற ஆவணங்களில் மோசடி உள்ளதா என அவரது உறவினர்களுக்கும் அழைப்பாணை விடுத்தனர்.

சோமாலியாவில் 1980களில் பிறந்த ஓமார், 1990களில் அகதியாக அமெரிக்காவுக்குச் சென்றார். அவரது குடியேற்ற வரலாறு பத்தாண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டும், எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

இந்தச் சோதனையை ஓமார் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது அரசியல் எதிரிகளைக் குறிவைக்கும் முயற்சி என அவர் சாடினார்.

அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் வழக்கத்திற்கு மாறானவை.

வெள்ளை மாளிகையின் அரசியல் அழுத்தமே இதற்குக் காரணம் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
பராக் ஒபாமாஅமெரிக்காடோனல்ட் டிரம்ப்