போரில் 3,468 ஈரான் வீரர்கள் மாண்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

போரில் 3,468 ஈரான் வீரர்கள் மாண்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

1 mins read
f31247e8-dcf6-43f1-b0cc-00e57b57f921
போரில் உயிரிழந்தோரின் படங்கள் சேதமுற்ற ஈரானிய குடியிருப்புக் கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் ஈரானில் 3,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அரசாங்கத்தின் முன்னாள் படைவீரர் மற்றும் தியாகிகள் நல அறநிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கிய பின்னர் நீடித்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் வேளையில் மாண்டோர் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

தற்போது, இருவார போர்நிறுத்தம் நடப்பில் உள்ளது.

“அண்மைய மோதலில் 3,468 போர்வீரர்கள் மடிந்துவிட்டனர்,” என்று அறநிறுவனத்தின் தலைவர் அகமது மௌசவி கூறியதாக ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், போரில் 3,375 பேர் கொல்லப்பட்டதாக ஏப்ரல் 12ஆம் தேதி வேறோர் அமைப்பு கூறியிருந்தது. ஆயினும், தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையே அதிகாரபூர்வமானது என்றது ஐஎஸ்என்ஏ.

குறிப்புச் சொற்கள்
ஈரான் போர்மரணம்உயிரிழப்பு