கடப்பிதழுக்குச் சொந்தக்காரர் இல்லாமல் பயணி நுழைவைப் பதிவிட்ட அதிகாரி

1 mins read
ed38e4b4-6f92-4422-bc71-42d5b811e5a3
அதிகாரிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மலேசியாவின் அமலாக்க முகவை ஒருங்கிணைப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. - படம்: த பிஸ்னஸ் டைம்ஸ்

புத்ராஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரி ஒருவர் கடப்பிதழுக்குச் சொந்தக்காரர் இல்லாமலேயே பயணி நுழைவைப் பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதியன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1ல் நிகழ்ந்தது.

இந்தத் தகவலை மலேசியாவின் அமலாக்க முகவை ஒருங்கிணைப்பு ஆணையம் திங்கட்கிழமை (ஜனவரி 19) வெளியிட்டது.

சம்பந்தப்பட்ட பயணி குடிநுழைவு முனையத்துக்கு வராமலேயே அப்பயணியின் கடப்பிதழ் விவரங்கள் உட்பட பயணி நுழைவு விவரங்களை அந்த அதிகாரி பதிவிட்டார்.

அதிகாரியின் செயல் மலேசியக் குடிநுழைவுத் துறையின் வழிகாட்டி நெறிமுறைக்கு எதிரானது என்று ஆணையம் தெரிவித்தது.

அந்த அதிகாரிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்