கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் தாக்கப்படலாம்: டிரம்ப் எச்சரிக்கை

கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் தாக்கப்படலாம்: டிரம்ப் எச்சரிக்கை

1 mins read
427dcca8-6a37-4222-975a-f67e98b5041f
கார்க் தீவின் ராணுவத் தளங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது. - படம்: ஏஎஃப்பி

கார்க் தீவு: ஈரான் பெரும்பாலான எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் கார்க் தீவின் ராணுவத் தளங்கள்மீது தாக்குதல் நடத்தியுள்ளது. முதன்முறையாக இரவு நேரத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் மத்திய கிழக்கில் பதற்றநிலை தணிவதாகத் தெரியவில்லை.

பெர்சிய வளைகுடாவில் உள்ள கார்க் தீவின் ராணுவ இடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

“கன்னியமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காக எண்ணெய் வசதியுள்ள இடங்களைத் தாக்கவில்லை,” என்று திரு டிரம்ப் சொன்னார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஈரான் இடையூறாக இருந்தால் எண்ணெய் வசதியுள்ள இடங்கள்மீது தாக்குதல் நடத்தப்படும் என்று திரு டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

அதற்குப் பதில் கொடுத்த ஈரான், தனக்குச் சொந்தமான எண்ணெய் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய எண்ணெய், எரிசக்தி உள்கட்டமைப்புகள்மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தது.

இந்நிலையில், தலைநிலத்திருந்து கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கார்க் தீவில் எண்ணெய் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ஈரானிய ஊடகம் தெரிவித்தது.

ஈரானும் அமெரிக்காவும் ஒன்று மற்றதன்மீது விடுக்கும் மிரட்டல்களால் எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் மேலும் நலிவடையும் என்று அஞ்சப்படுகிறது.

நான்காண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் 13ஆம் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை $100 அமெரிக்க டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது.

குறிப்புச் சொற்கள்