ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளால் எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம்

ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளால் எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம்

2 mins read
927ba1fe-dd1b-4179-a83a-f39a22cea709
அமெரிக்க நகரான ஒக்லஹோமாவில் உள்ள கச்சா எண்ணெய்க் கிடங்கு. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரான்மீது மீண்டும் தடைகளை ஏற்படுத்தியதோடு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து போகும் கப்பல்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளார்.

அதன் காரணமாக எண்ணெய் விலையின் ஏற்றம் செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 14) தொடர்கிறது.

ஏற்கெனவே திங்கட்கிழமை 9 விழுக்காடு ஏற்றம் கண்ட எண்ணெய் விலை அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் மேலும் 2.5 விழுக்காடு உயர்ந்தது.

சிங்கப்பூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு பிரண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் S$110.43 (US$85.40 ) என்று இருந்தது. வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட்டின் எண்ணெய் ஒரு பீப்பாய் S$103.63 ( US$80.14) என்று உயர்ந்தது.

அனைத்துலக எண்ணெய் விலையின் குறியீடுகளாக இந்த இரு வகை விலைகள் விளங்குகின்றன.

அமெரிக்கா ஈரான்மீதான ராணுவத் தாக்குதலை மூன்றாம் நாளாகத் தொடரும் நிலையில் அதிபர் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் பெரிய எண்ணெய் கப்பல்கள் 20 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் என்று விதித்திருக்கிறார். அது ஏறத்தாழ S$38.8 மில்லியன் (US$30 மில்லியன்) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளிடமிருந்து அந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் தடைகள் அண்மையில் அகற்றப்பட்டிருந்தபோது, ஈரான் 57 மில்லியன் பீப்பாய் அளவு எண்ணெய் ஏற்றுமதி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

எனவே மீண்டும் அந்நாட்டுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டால் உலகின் எண்ணெய் சந்தைக்கு எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

குறிப்புச் சொற்கள்
மத்திய கிழக்குஎண்ணெய்விலைஏற்றம்அமெரிக்காதடைகப்பல் எண்ணெய்