பங்குச் சந்தை வீழ்ச்சியால் எண்ணெய் விலை சரிவு

பங்குச் சந்தை வீழ்ச்சியால் எண்ணெய் விலை சரிவு

படம்: ராய்ட்டர்ஸ்

23 Nov 2026 - 3:33 pm

1 mins read

பெர்த்: உலக நிதிச் சந்தைகளில் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் திங்கட்கிழமை (நவம்பர் 23) எண்ணெய் விலை சரிந்தது.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி குறித்த கவலையால் தென்கொரியா, சீனா, ஹாங்காங், ஆஸ்திரேலியா ஆகிய ஆசியச் சந்தைகளும் அமெரிக்கப் பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன.

இதனால், தொடர்ந்து மூன்றாவது வாரமாகக் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, பீப்பாய்க்கு 28 காசு அல்லது 0.30 விழுக்காடு சரிந்து 92.29 அமெரிக்க டாலராக ($120) இருந்தது.

அமெரிக்க வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியேட் எண்ணெய் விலை, 15 காசு அல்லது 0.18 விழுக்காடு குறைந்து 83.26 அமெரிக்க டாலராகப் பதிவானது.

இருப்பினும், அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், எண்ணெய் விலை இழப்பைக் கட்டுக்குள் வைத்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை மீதும் வார இறுதியில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் கப்பல்கள் மீதும் ஹூதி குழுவினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் எண்ணெய் விநியோகத்தில் ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

இதற்கிடையே, துருக்கியேயில் நடைபெற்ற உலகப் பருவநிலை மாநாட்டில் படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து உடன்பாடு எட்டப்படாமல் பேச்சு முறிந்தது. 2027ஆம் ஆண்டிற்கான எண்ணெய் உற்பத்திக் கொள்கையை முடிவுசெய்ய ‘ஓப்பெக் பிளஸ்’ அமைச்சர்கள் நவம்பர் 29ஆம் தேதி சந்திக்கவுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
எண்ணெய்விலைஈரான்போர்தாக்குதல்