எண்ணெய் விலை குறைந்தது: ஆசிய நாடுகள் இருப்புகளை அதிகரிக்கத் திட்டம்

எண்ணெய் விலை குறைந்தது: ஆசிய நாடுகள் இருப்புகளை அதிகரிக்கத் திட்டம்

படம்: ஏஷியா ஒன்

09 Oct 2026 - 3:09 pm

1 mins read

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்நாட்டில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலுக்கு முன் ஈரானை தாக்கப்போவதில்லை என்று வியாழக்கிழமை (அக்டோபர் 8) அறிவித்தபின்பு எண்ணெய் விலை சற்றே தணிந்தது.

பிரண்ட் குறியீட்டின்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 0.7 விழுக்காடு குறைந்து S$132 (US$103.53) என ஆனது.

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சஸ் குறியீட்டின்படி அதன் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 0.6 விழுக்காடு குறைந்து S$116.38 (US$ 90.97) என்ற விலையை அடைந்தது.

இதற்கிடையே, ஆசிய நாடுகள் அவற்றின் எண்ணெய் இருப்புகளை உயர்த்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

எண்ணெய்க் கிடங்குகளில் உள்ள கொள்ளளவு வசதிகளை பெருக்குதல், வட்டார அளவில் மின்சாரக் கட்டமைப்பை ஒருங்கிணைத்தல், மறுபயனீட்டு நடைமுறைகளை விரைவாக்குதல் போன்ற செயல்பாடுகளை அவை விவாதித்து வருகின்றன.

மத்திய கிழக்குப் போரால் எண்ணெய் பற்றாக்குறையால் தென்கிழக்கு ஆசியாதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. போருக்கு முன், அவ்வட்டாரத்தின் 80 விழுக்காட்டு எண்ணெய் விநியோகம் ஹோர்முஸ் நீரிணையைச் சார்ந்திருந்தது.

“மிக மேம்படுத்தப்பட்ட முயற்சிகளின் அங்கமாக, எண்ணெய் இருப்புகளை வட்டார அளவில் ஒன்றிணைந்து சேமிக்கும் திட்டங்களை ஆதரிப்பதும் ஒன்றாகும். அத்திட்டத்தில் தன்னிச்சையாக நாடுகள் இணையலாம்,” என்று ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட ஒன்பது ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
எண்ணெய்கச்சா எண்ணெய்விலைஅமெரிக்காமத்திய கிழக்குபோர்ஈரான்ஈரான் போர்ஆசியான்ஜப்பான்ஆஸ்திரேலியாஅறிக்கை