ஹுஸ்டன்: அமெரிக்கா, ஈரான் போர் மீண்டும் தொடங்கும் என்ற அச்சத்தில் எண்ணெய் விலை 3 விழுக்காடு வெள்ளிக்கிழமை (மே 15) ஏற்றம் கண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஈரான் பற்றி எதிர்மறையான கருத்துரைத்ததும், ஈரான் வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவுடன் மீண்டும் போர் புரியவும் தயார், அரசதந்திர முயற்சிக்கும் தயார் என்று குறிப்பிட்டது நிலைமையை நிச்சயமற்றதாக்கியது. அதுவே எண்ணெய் விலையேற்றத்துக்கு வித்திட்டது.
ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு ஈரான் நிபந்தனைகளை உலக நாடுகளுக்கு விதித்துள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈரானுக்கு நம்பிக்கை இல்லை என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் நீரிணையில் உள்ள வர்த்தகக் கப்பல்களுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.
எண்ணெய் விலை
உலக எண்ணெய் விலையின் அளவுகோலாகக் கருதப்படும் பிரண்ட் குறியீடு 3.35 விழுக்காடு ஏற்றம் கண்டு, ஒரு பீப்பாய் S$139.93 (US$109.26) என ஆனது.
வட அமெரிக்க குறியீடான வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட்டின் ஒரு பீப்பாய் எண்ணெய், 4.2 விழுக்காடு உயர்ந்து, S$135.01 (US $105.42) என்ற விலையை எட்டியது.

