எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம்

எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம்

1 mins read
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல் நடத்தியதன் எதிரொலி
cc06adad-6156-46d2-b5e9-e1b69bd3cd1d
ஹோர்முஸ் நீரிணை. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் அறிவுரையைக் கேட்காததாகக் கூறப்படும் தரப்புகள்மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து எண்ணெய் விலை உயர்ந்தது.

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கப்பல்கள் செல்வதைத் தடுக்க டெஹ்ரான் முயற்சி எடுத்துவரும் நிலையில் இந்தச் சூழல் உருவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) காலை 8.24 மணி நிலவரப்படி பிரென்ட் குரூட் எண்ணெய்யின் விலை 1.4 விழுக்காடு கூடி பீப்பாய்க்கு 83.62 டாலராகப் (107.22 வெள்ளி) பதிவானது. அதற்கு முந்தையப் பதிவில் பிரென்ட் குரூட் விலை 4.9 விழுக்காடு அதிகரித்திருந்தது.

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியெட் எண்ணெய்யின் விலை 1.2 விழுக்காடு கூடி பீப்பாய்க்கு 78.25 டாலராகப் பதிவானது.

ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்கள் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) நடத்தப்பட்டன. அந்த நீரிணைக்கு அருகே உள்ள கெ‌ஷம் தீவுக்குப் பக்கத்தில் பலமுறை வெடிப்புச் சத்தம் கேட்ட பிறகு தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இவ்வாரத் தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது. இப்போது அந்த இழப்பு பெரிதும் ஈடுகட்டப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டு பாரசீக வளைகுடாவிலிருந்து எரிசக்தி மீண்டும் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கை கரைந்துபோயிருப்பதைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஈரான்கப்பல்அமெரிக்காஎண்ணெய்விலை