மாஸ்கோ: காஸ்பியன் பைப்லைன் கூட்டமைப்பு முனையத்துக்கு அருகில் கிரேக்கத்துக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய்க் கப்பல்கள், ஆளில்லா வானூர்திகளால் சேதமடைந்தன.
கசக்ஸ்தானின் எண்ணெய் ஏற்றுமதியில் 80 விழுக்காட்டை காஸ்பியன் பைப்லைன் கூட்டமைப்பு முனையம் கையாள்கிறது.
‘டெல்ட்டா ஹார்மனி’, ‘மடில்டா’ ஆகிய எண்ணெய்க் கப்பல்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மடில்டா எண்ணெய்க் கப்பல்மீது இரு ஆளில்லா வானூர்திகள் மோதியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மடில்டா கப்பல் இலேசாகச் சேதமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆளில்லா வானூர்திகள் மோதியதை அடுத்து, கப்பலின் மேல் தளத்தில் தீ மூண்டதாகவும் அது உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

