நடைபாதை என்று தவறாக எண்ணி பயணப்பெட்டிகளுடன் சென்ற மூதாட்டி

1 mins read
6c2744eb-b6b0-4d43-9dac-9d972f409456
மூதாட்டி பயணப்பெட்டிகளுக்கான பட்டை மீது நடப்பதை முதலில் யாரும் கவனிக்கவில்லை. - படம்: எக்ஸ்

ரஷ்ய விமான நிலையத்தில் பரபரப்புக்கு இடையே அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பயணப்பெட்டிகளைக் கொண்டு செல்லும் நகரும் பட்டையை, நடைபாதை என்று தவறாக எண்ணிய பெண் பயணி ஒருவர், அதில் ஏறினார்.

ஆனால், அதன் பிறகுதான் அது பயணப்பெட்டிகளுக்குரியது என்பதை அவர் உணர்ந்தார்.

மஞ்சள் ரோமமுடைய அங்கி, இளஞ்சிவப்புத் தொப்பி, நீண்ட கறுப்புச் சட்டை அணிந்திருந்தார் அந்த மூதாட்டி. விமான நிலையப் பணியாளர்கள் இருவர் ஒரு பயணியிடம் பேசிக்கொண்டிருந்த வேளை, அந்த மூதாட்டி பயணப்பெட்டிப் பட்டை மீது ஏறி நடக்கலானார்.

இதை அந்த மூவரும் கவனிக்கவே இல்லை.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

மூதாட்டி ஒரு கட்டத்தில் விழுந்துவிடுகிறார். அதன் பிறகு 10 நிமிடங்களுக்கு அந்த மூதாட்டி வித்தியாசமான ஒரு பயணத்தை மேற்கொண்டார்.

பயணப்பெட்டிகளைக் கையாளும் ஊழியர்கள் திடீரென ஒரு மூதாட்டியையும் கையாள வேண்டியதாயிற்று. நல்ல வேளை, அவருக்குக் காயங்கள் ஏதும் இல்லை.

ஒருவழியாக விமானப் பயணத்தை அவர் தம் குடும்பத்தாருடன் மேற்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்