திருமண மண்டபத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

திருமண மண்டபத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

1 mins read
16351ec1-0287-4e51-a66a-bb9969068251
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் கண்ணாடிக் கதவு ஒன்றில் குண்டுகள் பாய்ந்திருந்தன. - படம்: ஏஎஃப்பி

டியோன்விள்: திருமணச் சடங்கு நடந்துகொண்டிருந்த வேளையில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

வடகிழக்கு பிரான்சில் உள்ள டியோன்விள் நகரில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பழிவாங்குவதற்காக இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

விருந்து உபசரிப்பு மண்டபத்தில் கூடியிருந்த சுமார் 100 பேர் மத்தியில் இந்தத் தாக்குதல் நடந்ததாக நம்பப்படுகிறது.

இருவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டனர்.

“திருமணத்தை அவர்கள் குறிவைக்கவில்லை; திருமணத்தில் கலந்துகொண்ட சிலரைக் குறிவைத்திருக்கிறார்கள்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாதவர் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்