தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரீசில் காட்டுத்தீ; ஏதன்சில் நெருக்கடி

1 mins read
610f9de9-237e-42c5-b056-0c27f39caf0e
காட்டுத் தீ பல வீடுகளையும் வாகனங்களையும் சேதப்படுத்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஏதன்ஸ்: கிரீஸ் நாட்டில் தற்போது காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீ சம்பவத்தில் ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஏதன்சுக்கு வெளியே உள்ள சின்னச் சின்ன நகரங்கள் காட்டுத் தீயால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காற்று மெல்லமாக வீசுவதாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடுவதாலும் காட்டுத்தீ கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு கருவிகளை கொண்டு போராடி வருகின்றனர். விமானங்கள் மூலம் தண்ணீர் குண்டுகளையும் அதிகாரிகள் வீசினர்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கிய காட்டுத்தீ பல வீடுகளையும் வாகனங்களையும் சேதப்படுத்தியது. பல ஹெக்டர் வறண்ட காடுகள் தீக்கு இரையானது.

காட்டுத்தீயால் ஏற்பட்ட கடுமையான புகையால் அவ்வட்டார மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதனால் காட்டுத் தீ ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
காட்டுத் தீகிரீஸ்தீ