தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அர்ஜென்டினாவில் ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் மரணம்

1 mins read
4cee5862-d8f2-4c71-bb0a-d5634e7b38ba
ஹோட்டல் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வில்லா கெசெல்: அர்ஜென்டினாவின் கடலோரப் பகுதியான வில்லா கெசெல்லில் 10 மாடி ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பலரை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் புதன்கிழமை (அக்டோபர் 29) ஈடுபட்டனர்.

அனுமதி பெறாமல் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், நள்ளிரவு வாக்கில் அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை என மீட்பு அதிகாரிகள் கூறினர்.

காணாமல்போனவர்களில் சிலர் அந்தக் கட்டடத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களைத் தேடி மீட்க 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆளில்லா வானூர்திகள், மோப்ப நாய்கள், கண்காணிப்புக் கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தினர்.

அந்த ஹோட்டல் 1986ல் கட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்