அபாயகரமான காற்றை எதிர்கொள்ளும் மூன்றில் ஒரு பங்கு உலக மக்கள்தொகை: அறிக்கை

அபாயகரமான காற்றை எதிர்கொள்ளும் மூன்றில் ஒரு பங்கு உலக மக்கள்தொகை: அறிக்கை

படம்: ஏஎஃப்பி

30 Sep 2026 - 11:06 am

1 mins read

பாரிஸ்: உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மிக மோசமான அசுத்தக் காற்றை எதிர்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனல் காற்று, காட்டுத்தீ ஆகியவற்றுடன் 2026ஆம் ஆண்டு மனிதர்களால் ஏற்படும் நச்சுவாயு வெளியேற்றம் அதற்குக் காரணங்கள் என்று புதன்கிழமை (செப்டம்பர் 30) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரியவந்தது.

இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களுக்கான நிலவரம் கருத்தில்கொள்ளப்பட்டு அந்த அறிக்கை வரையப்பட்டது. அதையொட்டி பருவநிலை மாற்றத்துக்கும் காற்று மாசுபடுவதற்கும் உள்ள தொடர்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்னிக்கஸ் பருவநிலை வெளிமண்டலக் கண்காணிப்புச் சேவை (சிஏஎம்எஸ்) குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்பருவநிலைகாட்டுத்தீவானிலைகாற்றுத்தரம்மக்கள்தொகைஅறிக்கை