ஹோர்முஸ் நீரிணையைத் திறந்ததும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒப்புதல்

ஹோர்முஸ் நீரிணையைத் திறந்ததும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒப்புதல்

1 mins read
4fadc38e-8f29-487e-8af9-fc7c94bdf8f4
கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய்க்கு S$154 (US$120) என்ற அளவை எட்டியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பு (ஓபெக் பிளஸ்) மே மாதத்துக்கான அன்றாட எண்ணெய் உற்பத்தியை நாளுக்கு 206,000 பீப்பாய் அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழக்க நிலைக்குத் திரும்பியதும் அமைப்பின் உறுப்பு நாடுகள் அவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் தற்போது நடக்கும் போரினாலும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தடை விதித்துள்ளதாலும் அதன் உறுப்பு நாடுகளால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

பன்னிரு நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அமைப்பில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், குவைத், ஈராக், ஈரான் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுடன் ரஷ்யாவும் ஆப்பிரிக்க நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.

நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய்க்கு S$154 (US$120) என்ற அளவை எட்டி, உலக அளவில் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்