செயற்கை நுண்ணறிவைக் கொண்டு செயல்படும் 'சேட்ஜிபிடி'யை நடத்தும் ஓப்பன்ஏஐ நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமது தொழில்நுட்பக் கட்டமைப்பில் தவறுகளைக் கண்டுபிடித்தால் 26,000 வெள்ளி வரையிலான சன்மானத்தை தரவிருப்பதாக அது கூறியுள்ளது.
தவற்றின் தரத்திற்கு ஏற்ப சன்மானம் வழங்கப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டது. சன்மானத்தின் ஆரம்பகட்டத் தொகை ஏறக்குறைய 260 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது கட்டமைப்புகளை வலுப்படுத்த இதுபோன்ற சன்மான அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.
அண்மைக்காலமாக சேட்ஜிபிடி பற்றிய செய்திகள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. பல வேலைகளை எளிதில் செய்துமுடிக்க அது உதவுவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அதன் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சில நாடுகளில் சேட்ஜிபிடிக்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.