கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆகப் பெரிய இந்திய உணவங்காடியான ‘விருந்து’ வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) திறக்கப்பட்டுள்ளது.
செராஸ் வட்டாரத்தில் ஜாலான் நக்கோடா யூசோஃபில் அமைந்துள்ள இந்த உணவங்காடி, மலேசியாவிலுள்ள இந்திய உணவகத் தொகுதிகளிலேயே ஆகப் பெரியது என்று நம்பப்படுகிறது.
‘டசாதி அரோமா’ எனும் நிறுவனத்தில் இந்த உணவங்காடியில், மொத்தம் 26 இந்திய உணவுக் கடைகள் உள்ளன.
அங்கு 200க்கும் மேற்பட்ட இந்திய உணவு வகைகளோடு, சீன, மலாய், மேற்கத்திய உணவு வகைகளும் கிடைக்கும்.
ஏறத்தாழ 250 பேர் அமர்ந்து உண்ணக்கூடிய வசதியைக் கொண்ட இந்த உணவங்காடியில் கிட்டத்தட்ட 60 வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதியும் உள்ளது.