சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்ற மலேசியர்

சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்ற மலேசியர்

1 mins read
060ab4a2-5734-45c4-8263-8654e50b368b
படம்: ஏஎஃப்பி -

ஆசியக் கலைஞர்களுக்கு இன்று (மார்ச் 13) ஆஸ்கார் மேடையில் மகத்தான நாள்.

மலேசிய நடிகர் மி‌ஷெல் இயோவிற்கு 2023 ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

ஆசிய பெண்மணி ஒருவர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வெல்வது இதுவே முதல்முறை.

Everything Everywhere All At Once என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இயோ நடித்துள்ளார்.

ஆஸ்காரின் சிறந்த திரைப்படமாகவும் Everything Everywhere All At Once தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் உள்ள 60 வயதான இயோ நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் என்றார்

இந்தியாவின் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் 'நாட்டுக்கூத்து' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் வெற்றிபெற்றது.

'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கார் 2023 விருதை வென்றுள்ளது.

95வது ஆஸ்கார் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இன்று (மார்ச் 13) நடந்தது.