தோக்கியோ: ஜப்பானில் இருக்கும் விலங்கியல் தோட்டத்திற்கு ஒருவர், பல்லி ஒன்றை அஞ்சல்பொதி மூலம் அனுப்பியுள்ளார்.
அந்தப் பல்லியின் உடலில் உயிர் மட்டுமே எஞ்சி இருந்தது. இது ஜப்பானில் இருக்கும் விலங்குநல ஆர்வலர்கள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பொறுப்பற்ற செயலைச் செய்த செல்லப்பிராணி உரிமையாளருக்கு எதிராக ஜப்பானிய இணையவாசிகள் அனைவரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அந்த அஞ்சல்பொதி நவம்பர் 13ஆம் தேதி ஷிசுவோகா வட்டாரத்திலுள்ள கவாசுவில் இருக்கும் ‘ஐசூ’ எனப்படும் விலங்கியல் தோட்டத்தின் பிரதிநிதி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது என்று ஜப்பானிய செய்தி நாளிதழான ‘தி அசாஹி ஷிம்பன்’ தெரிவித்தது.

