தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா திரும்பி பணியாற்ற 10,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

1 mins read
4df06a66-84aa-4aa6-ae8c-f270dfdaca38
கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, மலேசியாவில் பணியாற்ற கோரிக்கை விடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் மலேசிய நிபுணர்களிடமிருந்து 11,402 விண்ணப்பங்கள் கிடைத்ததாக மலேசிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார். - படம்: மலேசிய ஊடகம்

கோலாலம்பூர்: வெளிநாடுகளில் வசிக்கும் 10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சொந்த நாடு திரும்பி பணியாற்ற விண்ணப்பம் செய்துள்ளதாக அந்நாட்டின் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, மலேசியாவில் பணியாற்ற கோரிக்கை விடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் மலேசிய நிபுணர்களிடமிருந்து 11,402 விண்ணப்பங்கள் கிடைத்ததாக மலேசிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

அவற்றில் 7,241 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதையடுத்து, 4,730 பேர் மலேசியா திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கல்வியாளர்களிடமிருந்து பெறப்பட்ட 80 விண்ணப்பங்களில் 63 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சிம் கூறினார்.

அவர்களில் 33 கல்வியாளர்கள் மலேசியா திரும்பிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

சொந்த நாடு திரும்பி பணியாற்ற வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்களை ஈர்க்க Malaysia@Heart திட்டம் பெரிதும் கைகொடுத்துள்ளதாக திரு சிம் கூறினார்.

மலேசியாவினல் உள்ள 59 நிறுவனங்களில் வேலை செய்ய 1,499 பேர் அத்திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இத்திட்டத்துடன் 19 கல்வி நிலையங்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சிம் குறிப்பிட்டார்.

நாடு திரும்பும் மலேசியர்களின் கல்வித் தேவைகளை இந்த நிலையங்கள் பூர்த்தி செய்யும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவேலைவிண்ணப்பம்