தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே நாளில் 1,631 விபத்துகள்!

1 mins read
81ed41dd-93c1-4890-9de0-59a7f75fd730
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவில் நோன்புப் பெருநாளுக்கு முதல்நாளான ஏப்ரல் 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று 1,631 விபத்துகள் பதிவாயின.

அவ்விபத்துகளில் 18 பேர் மாண்டுவிட்டதாகக் காவல்துறை தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கடந்த ஆண்டு நோன்புப் பெருநாளைக் காட்டிலும் இம்முறை குறைவான விபத்துகள் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு முதல்நாளன்று 1,683 விபத்துகள் நேர்ந்தன. அவ்விபத்துகளில் 22 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கிய ‘ஆப்பரேஷன் செலாமட் 22’ எனும் போக்குவரத்துப் பாதுகாப்பு நடவடிக்கை வரும் 13ஆம் தேதியுடன் முடிவுறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாளுக்காகச் சொந்த ஊருக்குச் செல்வோர் பொறுமையாகவும் சாலையில் பொறுப்புடனும் நடந்துகொள்ளும்படி காவல்துறைத் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் ஹுசைன் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபோக்குவரத்துவிபத்துஉயிரிழப்பு